MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!!

MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!!

சிங்கப்பூரில் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய அரசு அமைப்பு செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சு(MOM) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகின்ற ஸ்கில்ஸ் பியூச்சர் சிங்கப்பூர் (Skills Future Singapore – SSG) மற்றும் சிங்கப்பூர் ஊழியர் அணி (Workforce Singapore -WSG) ஆகிய இரு முக்கிய அமைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு திறன் மற்றும் ஊழியர் அணி மேம்பாட்டு முகவை (Skills and Workforce Development Agency – SWDA) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கங்கள் பின்வருமாறு:
வேலை தேடுபவர்களும் ஊழியர்களும் தங்களின் தொழில், வழிகாட்டுதல், திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பொருத்தம் ஆகிய அனைத்து சேவைகளையும் இனி வேறு வேறு இடங்களுக்குச் சென்று பெறாமல் இந்த ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலை சந்தையில் ஏற்படுகின்ற அதிவேக மாற்றங்களுக்கு ஏற்ப ஊழியர்களுடைய திறன்களை உடனுக்குடன் மேம்படுத்தி அவர்களை மேலும் தகுதிப்படுத்துவதற்கு இந்த அமைப்பு பெரும் உதவியாக இருக்கும்.

முதலாளிகள் தங்களுக்கு தேவையான தகுதியான ஊழியர்களை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களது நிறுவனத்தின் மனித வளத்தை மறு வடிவமைப்பு செய்வதற்கும் இந்த அமைப்பு மிக எளிமையான வழிமுறைகளை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பினுடைய வாரிய தலைவராக பிரபல வங்கியாளரான லிம் சிம் செங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) டிலிஸ் போய் நீ நியமிக்கப்பட்டார். பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மேலும் 11 முக்கிய பிரமுகர்கள் இந்த புதிய வாரியத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த இணைப்பு குறித்த அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் தனது வரவு செலவுத் திட்ட (Budget 2026) உரையின்போதே குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பின் மூலமாக நிகழ்கின்ற மாற்றத்தால் தங்களின் வழக்கமான சேவைகளில் எந்தவித தடங்களும் இருக்காது என்று MOM ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறுதியளித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK