பரிவர்த்தனைகளை வரலாற்றை ஏ.ஐ. ஆய்வு செய்து, உணவு, பயணம், ஆடைகள் ஷாப்பிங், மின்சார கட்டணம், பொழுதுபோக்கு என எந்தப் பிரிவில் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதை வட்டப் படம் (Pie Chart) மூலம் அழகாகக் காட்டும்.
அதுமட்டுமல்லாமல், இந்த மாதம் உணவுக்கான செலவு கடந்த மாதத்தைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளது, “இந்த செலவைக் குறைத்தால் மாத இறுதியில் இவ்வளவு தொகையை சேமிக்கலாம்” என்பது போன்ற பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கும்.
இதோடு, எஸ்.ஐ.பி. (SIP), கிரெடிட் ஸ்கோர், கூட்டு வட்டி, வரிச்சலுகைகள் போன்ற நிதி தொடர்பான விஷயங்களை எளிய மொழியில் விளக்குவதுடன், உங்கள் செலவுப் பழக்கத்தைப் பொறுத்து பொருத்தமான கிரெடிட் கார்டுகள், சலுகைகள், கேஷ்பேக் வாய்ப்புகள் ஆகியவற்றையும் பரிந்துரைக்கும்.
ஆகியவற்றையும் புரிந்துகொள்ள உதவும். இந்த ஏ.ஐ. வசதி 10 இந்திய மொழிகளில், குரல் மற்றும் எழுத்து வழியாக இயங்குகிறது. அதனால், ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் தங்கள் தாய்மொழியிலேயே கேள்விகளைக் கேட்டு பதில் பெற முடியும். இந்த வசதியை ஒரு வாரங்களில் பிரத்தியேக அப்டேட் மூலம் பெறலாம்.
இதுவரை “பணம் அனுப்பும் செயலி” என்ற அடையாளத்துடன் இருந்த கூகுள் பே, இனி “உங்கள் வருமானம், செலவு, சேமிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் புத்திசாலி நிதி உதவியாளர்” என்ற புதிய முகத்தைப் பெறுகிறது. எதிர்காலத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மட்டுமல்ல, தனிப்பட்ட நிதி மேலாண்மையையும் எளிமையாக்கப் போகிறது என்பதற்கு இந்தப் புதிய வசதி முக்கிய அறிகுறியாக இருக்கிறது.