சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!!
சிங்கப்பூர்: கிராஞ்சி பகுதியில், கார் சாவியை டயரின் மீது வைத்துவிட்டுச் சென்றதைச் சாதகமாக்கிக் கொண்டு காரைத் திருடிய ஒரு ஆண் மற்றும் பெண் இருவரையும் சிங்கப்பூர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 24 அன்று இரவு 7:45 மணியளவில், கிராஞ்சி லூப்(kranji Loop) பகுதியில் உள்ள ஒரு பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் (Multi-storey Car Park) நிறுத்தப்பட்டிருந்த வாடகை கார் ஒன்று திருடப்பட்டதாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.
காரின் ஓட்டுநர், தனது காரை நிறுத்திவிட்டு அதன் சாவியை காரின் டயர்களில் ஒன்றின் மீது வைத்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனை பயன்படுத்தி கொண்டாட திருடர்கள் காரை ஓட்டி சென்றுள்ளனர்.
உட்லண்ட்ஸ் காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) 29 வயதுடைய ஒரு நபரைக் கைது செய்து, திருடப்பட்ட காரையும் அவரிடம் இருந்து மீட்டனர்.
இதனை அடுத்து வாகன ஓட்டிகள் தங்களது கார் சாவிகளையோ அல்லது மின்சாவிகளையோ டயர்கள் போன்ற பொது இடங்களில் கவனம் இல்லாமல் வைத்துவிட்டுச் செல்ல வேண்டாம் என்றும், காரை விட்டு இறங்கும் போது பண அட்டைகள் மற்றும் மடிக்கணினிகளை எடுத்துச் சென்று காரைப் பத்திரமாகப் பூட்டுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.