சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் எட்டோமிடேட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,23 வயது இளைஞர் ஒருவர் மீது கடந்த மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) இன்று (ஜூலை 7)வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஜூலை 30 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் ஹெளகாங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில், அவரது வீட்டிலிருந்து 2 மின்னணு சிகரெட்டுகள் மட்டும் 55 மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களை ஆய்வு செய்ததில், அவற்றில் ‘எட்டோமிடேட்’ என்ற ஆபத்தான நச்சுப்பொருள் கலந்திருப்பது சோதனை முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டது.