மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!!

கோலாலம்பூர் : சிலாங்கூர்
மாநிலத்தில் வரி செலுத்தப்படாத (Uncustomed) மின்சிகரெட்டுகளையும் (Vapes), வழக்கமான சிகரெட்டுகளையும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 2 முக்கிய கடத்தல் கும்பல்களை மலேசியக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் மூலம் இந்த 2 பெரும் கடத்தல் நெட்வொர்க்குகள் காவல்துறையின் மூலம் கண்டறியப்பட்டு தகர்க்கப்பட்டது.

சோதனையின் போது பல மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான, மலேசிய அரசுக்கு வரி செலுத்தப்படாத லட்சக்கணக்கான மின்சிகரெட் திரவங்கள்(Vape liquids), சாதனங்கள், வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்களைப் பற்றி, செராசில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குநர் முகமது யுஸ்ரீ ஹாசன் பஸ்ரி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை $87.624 மில்லியன்(280.4 மில்லியன் ரிங்கிட்) பெறுமானமுள்ள கள்ளப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 411 பேர் காவல்துறையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் கும்பல்களின் தலைவர்கள், விநியோகஸ்தர்கள் உட்பட முக்கிய நபர்கள் பலரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம் மலேசிய அரசுக்குக் கிடைக்க வேண்டிய பெரும் வரி வருவாய் இழப்பு தடுக்கப்பட்டு, சட்டவிரோதப் பொருள்கள் சந்தைக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.