சிங்கப்பூர் மற்றும்
தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும்.
இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம்.
சுமத்ரா மற்றும் கலிமந்தன் பகுதிகளில் விவசாய நிலங்களை உருவாக்குவதற்காக காடுகள் மற்றும் பீட் லேண்ட் என்ற நிலங்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் இந்தோனேசியா காட்டுத்தீ பரவுகிறது.
ஜூன் முதல் அக்டோபர் வரை வீசும் தென்மேற்கு பருவக்காற்றானது இந்தோனேசியாவில் ஏற்படுகின்ற புகை மூட்டத்தை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை நோக்கி நகர்த்தி சென்றுள்ளது.
மேற்கண்ட இந்த பிரச்சனைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
காற்றில் மிதக்கும் நுண் துகள்கள் (PM2.5) அதிகரிப்பதால் ஆஸ்துமா, இருமல் மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதனால் சுவாசிப்பதில் பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது.
விமான போக்குவரத்து முடங்கியது சுற்றுலாத்துறை பாதித்தது மற்றும் வெளிப்புற வேலைகள் நிறுத்தப்படுவது போன்ற கடுமையான பொருளாதார இழப்பும் இதனால் உண்டாகும்.
இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எடுக்க வேண்டும்? கடுமையான புகைமூட்டம் இருக்கும் நாட்களில் மட்டும் சாதாரண முக கவசங்களை அணிவதற்கு பதிலாக N95 முக கவசங்களை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.
வீடுகளுக்குள் காற்று சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.
மாசு அளவு அதிகமாக இருக்கும் வேளையில் வெளியில் உடற்பயிற்சி செய்வதையோ அல்லது வேலை செய்வதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.