தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான Latest Update..!!
2026ல் சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்காக பல இன்ஸ்டியூட்டுகள் ஓபன் பண்ணி உள்ளது என்று இதற்கு முன்பாக நாம் தெரிவித்திருந்தோம்.
தற்பொழுது அதன் புதிய அப்டேட் என்ன என்று இந்த பதிவில் காணலாம். சிங்கப்பூர் செல்வதில் சிறந்தது டெஸ்ட் அடித்து செல்வது என்பது பலருக்கும் தெரியும். கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் அடிப்பது மிகவும் குறைந்திருந்த நிலையில் தற்பொழுது புதிய விதிமுறைகளுடன் தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புதிய விதிமுறை என்பது NSTC certificate உள்ள இன்ஸ்டியூட்கள் மட்டுமே டெஸ்ட் அடிப்பதற்கான ஆட்களை சேர்ப்பதற்கும் ட்ரெய்னிங் கொடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அட்மிஷன் ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று பேட்ச்களுக்கான ஆட்கள் சேர்ந்து விட்டதாக புதிய அப்டேட்டுகள் வந்துள்ளது.
இதனால் ஒரு பேட்ச்சிற்கு 45 நாட்கள் டெஸ்ட் அடிப்பதற்கு ஆகும் என்று வைத்துக் கொண்டால் அடுத்த 90 முதல் 120 நாட்களுக்கு புதிதாக யாரும் டெஸ்ட் அடிக்க முடியாது என்ற நிலை வந்துள்ளது. சிங்கப்பூரில் BCA வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே இந்த நிலை வந்துள்ளது.
நீங்கள் தற்பொழுது சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் குறிப்பாக தமிழ்நாட்டில் அட்மிஷன் போட்டீர்கள் எனில் எத்தனை நாட்கள் ஆகும் என்று இன்ஸ்டியூட்டில் கேட்டுக் கொள்ளுங்கள். அதிகபட்சமாக ஆறு மாதங்கள் கூட ஆகலாம். தற்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் அடிப்பதற்கு 4 லட்சத்திலிருந்து 5.50 லட்சம் வரும் செலவாகும்.
டெஸ்ட் அடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால் டெஸ்ட் அடிக்க செல்வதற்காக காத்திருந்த ஒரு சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.