மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..??

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..??

மலேசியாவில் ஜாலான் துன் டான் சியூ வட்டாரங்களில் உள்ள ஒன்பது இடங்களில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (13.02.26) அன்று குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புடு என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த 18 வெளிநாட்டு ஆடவர்களை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களில் 17 பேர் பங்களாதேஷ் சேர்ந்தவர்கள். ஒருவர் மியான்மரச் சேர்ந்தவர். 24 முதல் 51 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

விசாரணையின் போது இவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு மட்டுமே மருத்துவ சேவை வழங்கி வந்ததாக குடிநுழைவுத் துணைத் தலைமைச் செயல்பாட்டு இயக்குனரான திரு லோக்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு வார கண்காணிப்புகளுக்கு பிறகு கோலாலம்பூர் சுகாதாரத் துறையின் மருந்தக அமலாக்க பிரிவுடன் சேர்ந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள் இந்த ஒன்பது இடங்களை சோதனை இட்டது தெரியவந்தது.

மேலும் இதன் மூலமாக முன்புறம் சில்லறை விற்பனை கடைகள், துணி கடைகள், பயண முகவை முகப்புகள், முடி திருத்தகங்கள், உணவகங்கள் போன்ற வளாகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் பின்புறத்தில் தற்காலிக மருத்துவ ஆலோசனை அறையாகவும் சட்ட விரோதமான மருந்துகளுக்கான சேமிப்பு இடமாகவும் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பங்களாதேஷ் சேர்ந்தவர்கள் அனைவரும் குறைந்த கட்டணம் அறிந்த மொழி போன்ற காரணத்தினால் சட்டவிரோதமாக மருத்துவ சேவை நிலையங்களை நாடியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்த அவர்களுடன் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, நுண்ணுயிர் கொல்லி, வலி நீக்கி, நீரழிவு போன்றவற்றிற்கான சுகாதாரத்துறையால் முறையாக அங்கீகரிக்கப்படாத மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து திரு லோக்மான் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK