பரபரப்பு..!!சாங்கி விமான நிலையத்தில் நடந்த பேருந்து விபத்து..!!!

பரபரப்பு..!! சாங்கி விமான நிலையத்தில் நடந்த பேருந்து விபத்து..!!!

சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில், SBS Transit நிறுவனத்தின் 53-வது வழித்தட பேருந்தின் ஜன்னல் உடைந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஆன்லைனில் பரவி வரும் வீடியோவில், பேருந்தின் ஒரு பக்க ஜன்னலின் பெரிய பகுதி சிதறிய நிலையில் காணப்படுகிறது. விபத்து நேரத்தில் பேருந்தில் இருந்ததாகக் கூறிய இணையவாசி, ஓட்டுநர் அதிக வேகத்தில் பயணித்தபோது, நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தில் மோதியதாக தெரிவித்தார்.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை (SCDF) நேற்று (14.02.26) பிற்பகல் 1:30 மணியளவில், சாங்கி விமான நிலைய முனையம் 1 இல் அமைந்துள்ள 80 விமான நிலைய பவுல்வர்டில் நடந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

இந்த விபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும் SCDF கூறியது.
பாதிக்கப்பட்ட பேருந்தில் இருந்த பயணிகள் பின்னர் மற்றொரு பேருந்தில் மாற்றப்பட்டு பயணத்தைத் தொடர்ந்ததாக SBS Transit தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் இடையூறுக்கு நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK