சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் அதிகரிப்பு -ICA வெளியிட்ட அதிர்ச்சி தரவு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட 2025 ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தல் வழக்குகள் 30% உயர்ந்துள்ளன.மொத்தம் 57,400 சட்டவிரோத கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 600க்கும் மேற்பட்டவை மின்-சிகரெட்டுகள் தொடர்பானவை. ICA கடந்த ஆண்டு 667 மின்-சிகரெட் கடத்தல் வழக்குகளை கண்டறிந்து,3.5 லட்சத்துக்கும் அதிகமான மின்-சிகரெட்டுகள் மற்றும் பாகங்களை பறிமுதல் செய்துள்ளது.
சிகரெட்டுகள் கடத்தலில் குற்றவாளிகள் புதுமையான முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மறைக்கப்பட்ட பெட்டிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள், லாரிகளில் பிற பொருட்களுடன் சிகரெட்டுகளை மறைத்தல் போன்ற பல வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.விவசாயப் பொருட்களையும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் 1,000க்கு மேல் இருந்தாலும்,அது முந்தைய ஆண்டின் எண்ணிக்கைக்கு சமமானதாகும். அதேசமயம், போலி அல்லது வெவ்வேறு அடையாளங்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவோர் எண்ணிக்கை 40% வரை குறைந்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகள் கைது 10% குறைந்துள்ளது. ஆனால், காலாவதியான குடியேற்ற அனுமதியுடன் இருந்தவர்கள் 484 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது முந்தைய ஆண்டை விட அதிகம்.

போலி திருமணங்கள் தொடர்பான கைதுகள் 60% குறைந்துள்ளன. இது 41 வழக்குகளிலிருந்து 15 வழக்குகளாக குறைந்துள்ளதாக ICA தெரிவித்துள்ளது.
எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK