வேகவரம்பை மீறுகின்ற சைக்கிளோட்டிகளுக்கு என்னென்ன விதிமுறைகள்..??

வேகவரம்பை மீறுகின்ற சைக்கிளோட்டிகளுக்கு என்னென்ன விதிமுறைகள்..??

சிங்கப்பூரில் கவன குறைவாகவும் வேக வரம்பை மீறியும் ஓட்டுகின்ற சைக்கிள் ஓட்டிகளுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை சுமார் 650 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

நடைபாதைகளில் சைக்கிள் ஓட்டிகள் மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகம் வரம்பை தாண்டக்கூடாது என்று விதிமுறை போடப்பட்டுள்ளது.

பாதசாரிகளுடன் பகிரும் பாதைகளில் இந்த வரம்பு மணிக்கு 25 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் தவறு இழைக்கும் பட்சத்தில் சைக்கிள் ஓட்டிகளுக்கு எதிராக நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் காவல் துறையும் கூட்டு சோதனை நடவடிக்கை நடத்தி வருவதாகவும் திரு சியாவ் கூறியுள்ளார்.

அதிக சம்பவங்கள் பதிவாகும் இடங்களில் வேகம் மதிப்பீட்டு ரேடார்கள் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான சைக்கிள் ஓட்ட நடத்தை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஆணையம் சமூகத்துடன் சேர்ந்து சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு சியாவ் எழுத்துப்பூர்வ வடிவில் பதில் அளித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK