மலேசியா விமான நிலையங்களில் புதிய குடியேற்ற முறை..!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் புதிய தேசிய ஒருங்கிணைந்த குடியேற்ற அமைப்பு இன்று(03.03.26) முதல் கோலாலம்பூர் மற்றும் பினாங்கு சர்வதேச விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை பயணிகளுக்கு விரைவான மற்றும் ஒருங்கிணைந்த அனுமதியை வழங்குகிறது.
இதில் சிங்கப்பூர் உட்பட 64 நாடுகளின் குடிமக்கள் இனி MyNIIse QR குறியீட்டை பயன்படுத்தி குடியேற்றத்தை எளிதாக்கலாம்.
கோலாலம்பூர் விமான நிலையம் டெர்மினல்கள் 1 மற்றும் 2 இல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பினாங்கு விமான நிலையம் சர்வதேச குடியேற்ற கவுண்டர்களில் இதே முறை செயல்படுகிறது.
மின்னணு வாயில்கள் வழியாகச் செல்லும் பயணிகள் முக ஸ்கேனிங் மூலம் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள்.இதனால் தொப்பிகள், சன்கிளாஸ்கள், முகமூடிகள் போன்றவை அணியக் கூடாது.
தகவல் அதிகாரிகள் பயணிகளுக்கு இந்த புதிய நடைமுறையை பின்பற்றும் அவசியத்தை நினைவூட்டினர்.இது பயணிகளை மேலும் விரைவாக அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தகுதியற்ற பயணிகள் கூடுதல் சோதனைக்காக குடிவரவு கவுண்டருக்கு செல்ல வேண்டும்.இது தேசிய பாதுகாப்பையும்,பயணிகளின் நேரத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.