டெஸ்ட் அடிப்பது குறித்த முக்கிய அப்டேட்..!!

டெஸ்ட் அடிப்பது குறித்த முக்கிய அப்டேட்..!!

தற்பொழுது இந்தியாவில் டெஸ்ட் அடிப்பது சற்று சிரமமாக உள்ள நிலையில் இந்தியாவிலேயே ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகள் சிங்கப்பூருக்கு PCM ல் சென்று டெஸ்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார்கள்.

ஒரு சில ஏஜெண்டுகளும் PCM பர்மீட்டில் சென்று டெஸ்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார்கள். இது சாத்தியமா? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கப்பூர் வேலைக்கு செல்வது பலரின் கனவாக இருக்கும் நிலையில் தற்பொழுது உள்ள பாஸ்களில் வொர்க் மெட்டில் அதுவும் குறிப்பாக டெஸ்ட் அடித்து சென்றால் நீண்ட நாட்கள் இருப்பதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்பான Pass ஆகவும் கருதப்படுகிறது.

இதில் PCM பர்மீட்டில் சென்று டெஸ்ட் அடிக்கலாம் என்று ஒரு சில ஏஜெண்டுகள் சொல்லி அந்த பாசிற்கு ஐந்திலிருந்து ஆறு லட்சம் வரை பணம் வாங்குகிறார்கள்.

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
📌இந்த வேலைக்கு உங்களின் சம்பளம் மிகவும் குறைவாகவே இருக்கும்.

📌கம்பெனியில்  டெஸ்ட் அடிப்பதற்கான அனுமதி கடிதம் கொடுத்தால் மட்டுமே உங்களால் டெஸ்ட் அடிக்க முடியும்.

📌நீங்கள் டெஸ்ட் அடிப்பதற்கு கம்பெனி அனுமதி கடிதம் கொடுப்பது சில மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை நீங்கள் பல லட்சங்களை கட்டிவிட்டு குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்க வேண்டியது வரும்.
ஆனால் நீங்கள் டெஸ்ட் எடுத்து விட்டால் அதன் பின் உங்களுக்கு எந்த கவலையும் தேவையில்லை. ஏனென்றால் தற்பொழுது டெஸ்ட் அடிப்பது மிகவும் சிரமமாக உள்ளதால் டெஸ்ட் அடித்தவர்களுக்கான டிமாண்ட் சிங்கப்பூரில் அதிகமாகவே உள்ளது.

📌ஒரு ஒரு சில ஏஜென்ட்கள் அங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம் என்று பொய் சொல்லி ஐந்து முதல் ஆறு லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு உங்களை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அங்கு சென்றால் கம்பெனி டெஸ்ட் அடிக்க அனுமதிப்பதில்லை. இதுபோன்று தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.
நீங்கள் செல்லும்போது முடிந்தவரை அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகளிடம் சென்றீர்கள் என்றால் அவர்கள் உங்களை சரியான முறையில் உண்மையை சொல்லி மட்டுமே அனுப்புவார்கள்.

Pcm பர்மீட்டில் சென்று டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தவற விட்டு விடாதீர்கள். ஆனால் அது உண்மையா? என்று ஆராய்ந்து செயல்பட்டால் நல்லது.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதள பக்கமான www.sgtamilan.com இல் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK