சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!!

சோதனை சாவடிகளில் கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!!

தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கும் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு நடைமுறைகளில் மேலும் உதவுவதற்கு அதிகமான அதிகாரிகளை பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை குடி நுழைவு சோதனை சாவடிகளில் பணிகள் செய்வதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சோதனை சாவடிகளில் ஒரு சிலருடைய பயணிகளின் உடமைகள் மட்டுமே சோதனை செய்யப்படும். ஆனால் பிப்ரவரி 28 முதல் எல்லா பயணிகளுடைய உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

கூடுதல் சோதனையாக, X-ray சோதனைத் தடங்கள் வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் மீது தீவிர சோதனை நடத்தப்படுவதும் இவற்றில் அடங்கும்.

சில நேரங்களில் தீவிரமாக சோதனை செய்ய நேர்ந்தால் அனைவரையும் குடிநுழைவு அதிகாரிகள் சோதனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த இடங்களில் அதிகமான பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்களோ அந்த இடங்களுக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் பாதுகாப்பு சோதனைகள் கண்டிப்பான முறையில் வேண்டும் என்பதால் பொதுமக்கள் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK