போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள்..!! இணையவாசிகள் பதிவிட்ட கருத்து என்ன..??
சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (மார்ச் 25ஆம் தேதி) கெய் எல் டௌபெர்யு என்ற இணையவாசி “கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்” என்ற முகநூல் குழுவில் தல கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை பதிவிட்டார்.
இதில் சாலை அடையாளப் பொறியானது அதன் முன்னால் இருந்த ஒரு மரத்தால் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் காட்சி பதிவிடப்பட்டுள்ளது.
இந்த சாலை குறியீட்டு பலகையில் இருந்த குறியீட்டை முழுமையாக சாலையில் பயணம் செய்பவர்களோ அல்லது நடைபாதையில் செல்பவர்களோ பார்க்க முடியாத வண்ணம் முழுவதுமாக மரத்தால் மறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்களை சமீபத்தில் இணையர் புகார் ஒன்றை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட கேள்வி, “சாலை அடையாளப் பலகையை வைத்துவிட்டு அதன் முன்னாள் ஒரு மரத்தை நடுவதால் பயன் என்ன? ஓட்டுனர்களால் அந்த சாலை அடையாளப் பலகையை பார்க்க இயலாது”
மரக்கிளைகளை வெட்டி சரி செய்வதற்காக இந்த நிலைமையை தேசிய பூங்கா சேவைக்கு தெரிவிக்க வேண்டும் என இணையவாசி கருத்துப் பகுதியில் பரிந்துரைத்துள்ளார்.
நீங்கள் பூங்கா சேவையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு மரக்கிளைகளை வெட்டி ஒழுங்கு பாடினால் மட்டும் போதும் அவர்களிடம் நீண்ட கால ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர் எனவே இந்த வேலை விரைவாக முடிந்துவிடும் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.
சில இணையவாசிகள் கூறிய கருத்து: நீங்கள் “ஒன் சர்விஸ்” செயலி மூலம் புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம். இந்த செயலி பூங்காக்கள் வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட துறைகளுக்கான தகவல்களை தானாகவே அனுப்பிவிடும். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்தவுடன் உங்களுக்கு தெரிவிப்பார்கள்”.
மார்ச் 2024 இல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தேசிய பூங்காக்கள் வாரியம் ஆனது தவறாமல் ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கும் சாலையோர புதர்களை தவறாமல் ஒழுங்கு படத்தையும் போக்குவரத்து சிக்னல்களை மறைக்கும் தாவரங்களை சிறிது கத்தரித்தும், சாலையோர பசுமையை மாதந்தோறும் ஆய்வு செய்வதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்தது.
இது போன்ற கருத்துக்களை பெற்றவுடன் அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் தேவைப்பட்டால் பொதுவாக இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.