சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!!

சிங்கப்பூரில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ஸ்கேனிங் முறை..!!

சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA),  உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள ஸ்கேனிங் முறையை மேம்படுத்த உள்ளது.

தற்போது இருக்கும் கைரேகை ஸ்கேனிற்கு பதிலாக, முகத்தை அங்கீகாரம் செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த செயல்முறையானது அனுமதி வழங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது 18 தானியங்கி அனுமதிப் பாதைகளில் இந்த செயல்முறையானது, இன்று (மார்ச் 31) அமலுக்கு வருகிறது.

மேலும் இதனைத் தொடர்ந்து, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள அனைத்து மோட்டார் சைக்கிள் பாதைகளுக்கும் இந்த முக அங்கீகார அமைப்பானது (Face Recognition) விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் ICA தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைகின்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள், “MyICA” என்ற  செயலி மூலமாகவோ அல்லது தங்களது கடவுச்சீட்டில் உள்ள QR குறியீட்டின் மூலமாக ஸ்கேன் செயதோ, அங்கீகாரத்தை நிறைவு செய்த பின் ஹெல்மெட்டை உயர்த்தி, கண்ணாடிகளை அகற்றி, முக அங்கீகாரத்தைப் பெற கேமராவை நோக்கி திருப்பினால் மட்டும் போதுமான வகையில் இந்த புதிய முறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இருக்கின்ற அங்கீகார முறையானது பயணிகள் QR ஸ்கேன் செய்த பிறகு, பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பயணிகளின் கைரேகைகளைப் பதிக்க வேண்டும்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு மழை காலங்களில் கைரேகை அங்கீகாரம் ஆனது, பாதிக்கப்படும் வகையில் இருந்ததாகவும், தற்போது இந்த முக அங்கீகாரம் எந்த வித தொடுதலும் இன்றி இருப்பதால் இது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வசதியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ICA அதிகாரிகள் கூறிய விதிமுறைகள் பின்வருமாறு:
👉🏻நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் சிங்கப்பூருக்கு முன்பே வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் முகத்தை அடையாளம் காணவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

👉🏻சிங்கப்பூருக்கு முதல் முறையாக வருபவர்கள் மட்டும் நேரடியாக கவுண்டர்களின் குடிவரவு நடைமுறைகளை முடித்துவிட்டு, பிறகு QR குறியீடு மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

👉🏻அனுமதியை விரைவுப்படுத்தவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் QR குறியீடுகளைப் பயன்படுத்தலாம் எனவும், இருப்பினும் பயணிகள் கடவுச் சீட்டுகளை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

👉🏻கடவுச்சீட்டுகளை மாற்றிய பிறகு, QR குறியீட்டையும் புதுப்பிக்க வேண்டும் அப்படி புதுப்பிக்கவில்லையெனில், சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல முடியாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

ICA இந்த தொழில்நுட்பம் குறித்து ஜனவரி மாதத்தில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் 1,50,000-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளிடம் கருத்து பெறப்பட்டுள்ளது.

மேலும் இந்த முக அங்கீகார அமைப்பானது துவாஸ் சோதனைச் சாவடியில், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK