“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!!

“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!!

தென்மேற்கு சீனாவைச் சேர்ந்த ஸிஹௌ மற்றும் சியாவ்யு என்ற காதல் ஜோடியின் உயரம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

அதாவது ஆணை விட பெண் சற்று உயரமாக உள்ளார்.ஆண் 1.68 மீட்டர் உயரமும் பெண் 2.2 மீட்டர் உயரமும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அவர்கள் சீனாவின் சொங்சிங் நகரைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் 2 வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்து வருகின்றனர்.

அவர்கள் ஒருவருக்கொருவர் 3 வருடங்களுக்கு முன்பிலிருந்தே தெரியும்.

சீன சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இந்த உயர வித்தியாசத்தைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.

உயர வேறுபாடு அவர்களின் அன்றாட வாழ்வில் ஒரு பெரிய தடையாகத் தெரியவில்லை என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அவர்களின் வயது குறிப்பிடப்படவில்லை.

பலர் தாங்கள் பொருத்தமாக இல்லை என்று கூறியதாக ஸிஹௌ கூறினார்.

குடும்பத்திலும் தங்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக கூறினார்.

ஆனால் இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.