S$4,900 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு..! சாங்கி விமான நிலையத்தில் தாய், மகன் கைது..!!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயது இளையரும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சாங்கி விமான நிலையத்தின் 2-வது முனையத்தின் இடைவழிப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை திருட்டு தொடர்பான புகார் காவல்துறைக்கு கிடைத்தது.
அங்குள்ள ஒரு கடையில் இருந்து 3 கருப்புக் கண்ணாடிகள் காணாமல் போனதை ஊழியர் ஒருவர் கவனித்துள்ளார். அந்தக் கண்ணாடிகளின் மொத்த மதிப்பு சுமார் S$1,500 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 16 வயது இளையர் ஒருவர் கண்ணாடிகளை எடுத்துச் சென்று, அதற்கான பணத்தைச் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறியது பதிவாகியிருந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்த இளையரை அடையாளம் கண்டனர். பின்னர் அவர் விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக, அவரது தாயுடன் சேர்ந்து பிடிபட்டார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த 16 வயது இளையர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 6 வெவ்வேறு கடைகளில் பல்வேறு பொருட்களைத் திருடியதாகத் தெரியவந்துள்ளது. அவர் திருடியதாகக் கூறப்படும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் S$4,900 என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தீப்பற்றியதை பார்த்ததும் ஒருவர் மட்டும் உதவாமல், பல குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து தீயை அணைக்கவும், அருகில் இருந்தவர்களை வெளியேற்றவும் உதவியுள்ளனர்.
அவசர நேரத்தில் அண்டை வீட்டினர் ஒருவருக்கொருவர் உதவிய இந்தச் சம்பவம், உட்லண்ட்ஸ் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
