கான்கிரீட் தூண்களுக்குள் மறைத்து வைத்த 4,500 கார்ட்டன் சிகரெட்டுகள்..!! துவாஸில் சிக்கிய லாரி..!!
சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த முயன்ற சம்பவத்தில் 26 வயதான மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), செப்டம்பர் மாத தொடக்கத்தில் துவாஸ் சோதனைச் சாவடியில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்த முயன்ற சம்பவத்தை முறியடித்துள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்று துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது, ICA அதிகாரிகள் அதில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டறிந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக சோதனையில், லாரியில் கொண்டு செல்லப்பட்ட கான்கிரீட் தூண்களின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
லாரியில் இருந்து மொத்தம் 4,500 கார்ட்டன் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ICA தெரிவித்துள்ளது.