ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்...!!

சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் ‘வில்லியம் ஃபார்குவார் இயற்கை வரலாற்று வரைபடங்கள்’ தொகுப்பிலிருந்து 36 கலைப்படைப்புகள் சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள ஓவியங்கள் சராசரியாக 200 ஆண்டுகள் பழமையானவை.

‘‘டெயில்ஸ் ஃப்ரம் த கோஸ்ட்ஸ்: சிங்கப்பூரின் இயற்கைக் கதைகள்’ என்ற தலைப்பிலான இந்தத் தொகுப்பு, சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

சிங்கப்பூர்-மலாயன் பாலூட்டியான பிந்துராங், சுத்தியல் தலை சுறா மற்றும் அரிதான மெதுவாக நகரும் லோரிஸ் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில முக்கிய படைப்புகளில் அடங்கும்.

சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் திருமதி சுங் மே குயென். சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த இரண்டு அருங்காட்சியகங்களும் மிகப் பழமையானவை என்று சுட்டிக்காட்டினார்.

‘‘டெயில்ஸ் ஃப்ரம் த கோஸ்ட்ஸ்:சிங்கப்பூரின் இயற்கைக் கதைகள்’ கண்காட்சித் தொகுப்பு மே 10 முதல் செப்டம்பர் 7 வரை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.

அனுமதி இலவசம்.மேல் விவரங்களுக்கு australian.museum/exhibition/tails-from-the-coasts ஐப் பார்வையிடவும்.