ஜூன் மாதம் டெஸ்ட் அடிப்பதற்கான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

ஜூன் மாதம் டெஸ்ட் அடிப்பதற்கான அப்டேட்டை பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

தற்போது உள்ள இளைஞர்களில் பலருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து செல்ல வேண்டும் என்பது கனவாக உள்ளது. சிங்கப்பூர் வேலைக்கு செல்ல பல பாஸ்கள் இருந்தாலும் டெஸ்ட் அடித்து செல்வது மிகவும் சிறந்த வழி.

ஏனென்றால் டெஸ்ட் எடுத்துச் செல்லும் போது நீண்ட நாட்கள் நாம் சிங்கப்பூரில் இருக்க முடியும். அதேபோன்று Work permit renewal என்பது மிகவும் எளிதாக கிடைக்கும்.

ஆனால் சமீப காலமாக சிங்கப்பூருக்கு டெஸ்ட் அடிப்பதற்கான கோட்டா மிகவும் குறைவாகவே இருப்பதால் பலரும் டெஸ்ட் அடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ஒரு சில Institute கள் தமிழ்நாட்டில் மீண்டும் டெஸ்ட் அடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளன. அந்த வகையில் அந்த institute இல் ஏற்கனவே அட்மிஷன் போட்டு பணம் செலுத்தியவர்களை தற்போது டெஸ்ட் அடிக்க வைக்கிறார்கள். ஆனால் கடந்த வருடம் பணம் கட்டியவர்கள் தான் இப்போது டெஸ்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் கோட்டா அதிகப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான Institute கள் இன்னும் மூடப்பட்டுள்ளது.

இதை ஒரு சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் ட்ரைனிங் கொடுத்து சிங்கப்பூர் சென்று டெஸ்ட் அடிக்க வைப்பதாக கூறி அதிகமான பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அங்கு சென்று டெஸ்ட் அடிக்க முடியவில்லை என்று பல பேர் புகார் அளிக்கின்றனர். எனவே சிங்கப்பூர் செல்பவர்கள் மிகவும் கவனமாக நம்பிக்கையான அரசு அனுமதி பெற்ற ஏஜென்ட்களையும், டெஸ்ட் Institute களையும் அணுகவும்.

நீங்கள் இதற்கு முன்பாகவே முன் பணம் செலுத்தி அட்மிஷன் போட்டிருந்தீர்கள் என்றால் குறுகிய காலத்தில் நீங்கள் டெஸ்ட் அடித்து விடலாம் புதிதாக அட்மிஷன் போடுபவர்கள் இப்போது அட்மிஷன் போடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கடந்த ஆண்டு முன்பணம் செலுத்தியவர்கள் தான் இந்த ஆண்டு டெஸ்ட் அடிப்பதற்காக செல்ல உள்ளனர். எனவே காத்திருக்கும் நாட்கள் மிகவும் அதிகமாக இருப்பதால் இப்போது நீங்கள் முன் பணம் அதிகமான தொகையை செலுத்த வேண்டாம். அதேபோல் இடைத்தரகர்களையும் நம்ப வேண்டாம்.

இது போன்ற சிங்கப்பூர் செய்திகள், சிங்கப்பூர் வேலை வாய்ப்பு செய்திகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள நமது SGTAMILAN இணையபக்கத்தில் இணைந்திருங்கள்.