Toto விளையாட்டில் புதிய வகை!! 2 எண்கள் பொருந்தினால் toto பரிசு!!

Toto Match எனும் புது வகை Toto விளையாட்டை Singapore Pools அறிமுகம் செய்துள்ளது.அதற்கான விற்பனை ஜூன் 10 ஆம் தேதி தொடங்கும்.
அதன் முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்.
Toto விளையாட்டில் குறிப்பிட்ட பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.இதன் காரணமாக புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளதாக Singapore Pools அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது அமலில் உள்ள Toto விளையாட்டைப்போல் Toto Match இருக்காது என்றும் கூறியது.
Toto விளையாட்டில் வெற்றி பெறும் நபருக்கு மாபெரும் பரிசு அதாவது Jackpot கிடைக்கும்.
ஆனால் Toto Match இல் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஒரு குறிப்பிட்ட பரிசுத்தொகை வழங்கப்படும்.
கூடுதல் தொகை போட்டால் பரிசுத்தொகையும் அதிகரிக்கும்.
வாடிக்கையாளர்கள் இரண்டு விளையாட்டு வகைகளின் கீழ் டிக்கெட் வாங்க முடியும்.
முதல் வகை
இதில் ஒன்று முதல் 49 வரையிலான எண்களில், இரண்டு முதல் நான்கு எண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் ஆறு வெற்றி எண்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எண்களும் இடம்பெற்றால் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம்.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வெள்ளி பந்தயத்திற்கும், இரண்டு எண்கள் பொருந்தினால் S$50, மூன்று எண்கள் பொருந்தினால் S$500 மற்றும் நான்கு எண்கள் பொருந்தினால் S$7,000 வெல்லலாம்.
இரண்டாவது வகை
இரண்டாவது வகை பந்தயத்தில், ஒன்று முதல் 49 வரையிலான எண்களில் ஒரு எண்ணைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த எண் கூடுதல் எண்ணுடன் (additional number) பொருந்தினால், ஒவ்வொரு வெள்ளி பந்தயத்திற்கும் S$30 வெள்ளி பரிசாக கிடைக்கும்.
ஆனால் இதில் வெற்றி பெற, TOTO Match விளையாட்டின் கீழ் பந்தயம் கட்ட வேண்டும்.
சாதாரண டோட்டோ பந்தயம் இதற்கு பொருந்தாது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan