அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!!

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்’கலகபோவது யாரு?’ ‘சிரிச்சா போச்சு’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்தான் புகழ்.

இவரின் எதார்த்தமான காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனாலையே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன் பிறகு அவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

இப்போது அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர், சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடித்த’1947′ என்கிற படத்தில் அவர் பேச முடியாத ஒரு ஊனமுற்ற நபராக நடித்து அசத்தினார்.

எனவே அவரை ஹீரோவாக வைத்து ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படம் தயாரிக்கப்பட்டு வந்தது. இவருக்கு ஜோடியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார்.இந்த படத்தை ஜே சுரேஷ் இயக்க, ஜே4 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. மேலும் இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் சில வருடங்களுக்கு முன்பு படமாக்கப்பட்டது. ஆனால் இன்னும் வெளியிடப்படவில்லை.

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ வெளியீட்டில் தாமதம்:

படத்தில் எந்த அனிமேஷன் காட்சிகளும் இல்லாமல் ஒரு உண்மையான புலி இடம்பெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு, கோடை விடுமுறைக்கு முன்னதாக, மே 3 ஆம் தேதி படம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது.ஆனால் ஒரு வருடம் ஆகியும் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாமல் டிரெய்லர் மட்டும் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம்

படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழுவினரோ அல்லது நடிகர்களோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.