அவர்களில் ஒருவர் மற்றொருவரை தனது ஊன்றுகோலால் தாக்கியுள்ளார். அதனால் கோபமடைந்த தனிப்பட்ட நடமாடும் உதவியைப் பயன்படுத்தும் மற்றொரு மூதாட்டி அவரை திருப்பித் தாக்கியுள்ளார்.
இணையத்தில் பரவும் காணொளிகளின்படி, பச்சை நிற மேலாடை அணிந்து கைத்தடியை ஏந்தியிருந்த மூதாட்டி, சாம்பல் இளஞ்சிவப்பு நிற மேலாடை அணிந்த தனி நபர் நடமாடும் உதவிச் சாதனத்தில் அமர்ந்திருந்த மற்றொரு மூதாட்டியைத் தாக்கியது தெரிகிறது.
சாம்பல் இளஞ்சிவப்பு நிறக் கோட் அணிந்திருந்த மூதாட்டியும், எதிர்த்து போராட எழுந்து நின்றுள்ளார். ஆனால் அவர் நிலை தடுமாறி நிற்க முடியாமல் தரையில் விழுந்தார். அதன் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டும் முடியை பிடித்து இழுக்க முயன்றுக் கொண்டு சண்டையிட்டதும் அந்த காணொளியில் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து ஜூன் 22ஆம் தேதியன்று 8:00 மணி அளவில் காவல்துறையினருக்கு, செராங்கூன் சென்ரல் சாலையில் உள்ள 261-க்கு உதவி தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
69 வயதான மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் 65 வயதான மூதாட்டி சிறு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த 2 மூதாட்டிகளும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.