சிங்கப்பூரில் சம்பளம் கிடைக்காமல் தவிக்கும்
தொழிலாளர்கள்..!!தலைமறைவான நிறுவன இயக்குநர்..!! இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது..??
சிங்கப்பூரில் ராமு பழனிவேலு என்ற ஒரே இயக்குநரை கொண்ட 3 நிறுவனங்களின் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இந்த 3 நிறுவனங்களின் பொதுவான இயக்குநரான அவர் தற்போது சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக KPA Engineering மட்டும் SK Industries ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது 3வதாக VVR Plant Engineering நிறுவன தொழிலாளர்களும் இணைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்த சுமார் 400 மின்கல / வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த சம்பளப் பாக்கி சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ராமு பழனி வேலு இந்தியக் குடியுரிமை மற்றும் சிங்கப்பூர் நிரந்தர வசிப்பிட உரிமம் (PR) பெற்றவர். இவர் சிங்கப்பூரில் ஏர்- கண்டிஷனிங், பிளம்பிங் மற்றும் கட்டுமானப் பணிகள் சேர்ந்த 7 நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை தொடர்புக் கொள்ள முயன்ற போது, அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரியில் தற்போது வசிக்கவில்லை என்பதும் தெரிகிறது.
தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக இந்த நிறுவனங்களின் மீது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் வெளிநாட்டு ஊழியர் மையம் (MWC) இணைந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு $100 ரொக்க பணம், $100 மதிப்ப்பிலான NTUC வவுச்சர்கள், உணவு மற்றும் தங்கும் வசதிகளை வழங்கி வருகின்றன.
தொழிலாளர்கள் தங்களின் சம்பளப் பாக்கிப் பிரச்சினைகள் தீரும் வரை சிங்கப்பூரில் தங்குவதற்காக தற்காலிக சிறப்பான அனுமதி(Special Pass) வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை தேடிக்கொள்ள 150க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.