சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஹாலாண்ட் சாலையில் ஒரு லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த வழியாக சென்று கொண்டிருந்த SBS டிரான்ஸ்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவர் இந்த விபத்தைக் கவனித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, உடனடியாக பேருந்தில் இருந்த தீயணைப்பானை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி தீயை அணைக்க உதவியுள்ளார்.
இச்சம்பவம் குறித்த வீடியோவானது sgfollowsall என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் சம்பவத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட கருப்பு நிற லம்போர்கினி சூப்பர் காரின் பின்புற இன்ஜினியிலிருந்து தொடர்ந்து வெள்ளைப் புகை வெளியேறுவதும், அதன் முன் பக்க மூடியில் தீக்காயத் தடங்கள் இருப்பதும் தெரிகிறது.
51 வயதான பேருந்து ஓட்டுநர் ஜாங் ஜிபெங், தீயணைப்பானே ஏந்தியபடி ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுநர் நம்பப்படும் ஒருவருடன் சேர்ந்து இன்ஜின் பகுதியை ஆய்வு செய்வதும், அதன் பின்னர் தீயணைப்பாணை இன்ஜின் பகுதியை நோக்கி குறிவைத்து அதிக அளவு உலர்ந்த தூளைக் காரில் தெளிப்பதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்த பிறகு பேருந்து ஓட்டுநர் தீயணைப்பான எடுத்துக் கொண்டு, சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 123 ஆம் எண் பேருந்திடம் திரும்பியுள்ளார்
பேருந்து ஓட்டுநரின் இந்த சமயோசித புத்தியையும் மனிதநேயத்தையும் இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் “கேடயம் இல்லாத ஹீரோ” (Hero Without cape) என பாராட்டி வருகின்றனர்.
இது குறித்த SBS டிரான்ஸ்சிட் தரப்பு கூறியதாவது, புதிய MRT பேருந்து ஓட்டுநர்கள் தங்களது திறன் பயிற்சியின்போது அடிப்படை தீப்பாதுகாப்பு பயிற்சி பெற்றுள்ளதால், ஜாங் ஜிபெங் தான் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி பேருந்தில் உள்ள பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டே அவசர கால சூழ்நிலைகளில் அமைதியாகவும் உறுதியாகவும் உதவி வழங்க முடிந்தது என்று கூறியுள்ளது.
அவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்துள்ளார்; மேலும் உதவி தேவைப்படும் ஓட்டுநர்களுக்கு ஒரு இக்கட்டான தருணத்தில் அவர் முன்வந்தது பாராட்டுக்குரியச் செயல் எனவும் தெரிவித்துள்ளது.