சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேலை தேடுவது எப்படி??

சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேலை தேடுவது எப்படி??

தயவு செய்து இந்தப் பதிவை முழுவதுமாக படியுங்கள்!! இதில் நீங்கள் செய்ய வேண்டியது , செய்யக் கூடாதது மற்றும் உங்கள் சம்பள உயர்வு, உங்கள் வாழ்க்கை தர உயர்வு என அனைத்தும் அடங்கியுள்ளது. இதை முயற்சி செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

தற்பொழுது சிங்கப்பூரில் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைப்பது என்பது கடினமாகவே உள்ளது. அதனால் பல பேர் கிடைத்த வேலைக்கு செல்கின்றனர்.

அதிலும் பலபேர் பார்க்கும் வேலை பிடிக்காமலே வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நீங்கள் சிங்கப்பூருக்குள் சென்றவுடன் உங்கள் தகுதிக்கேற்ற வேலையை தேடுவது மிகவும் எளிது.அதுவும் எந்தவித ஏஜென்ட் கமிஷன்(Agent Fees) இல்லாமல் நீங்கள் முயற்சி செய்யலாம்.

அதற்கான வழிமுறைகள் என்னென்னவென்று இந்த பதிவில் காணலாம்.

அதேபோல் இதில் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்றும் காணலாம்.

1.முதலில் நீங்கள் சிங்கப்பூரில் வேலை தேட வேண்டும் என்றால் அதுவும் இலவசமாக வேலை தேட வேண்டும் என்றால் அதற்கு ஒரு சில அப்ளிகேஷன்கள்(App) உள்ளது.

உதாரணத்திற்கு
LinkedIn.com
Jobstreet.com
என இதுபோன்று பல அப்ளிகேஷன்கள் உள்ளது.

இதன் மூலமாக நீங்கள் வேலை தேடலாம்.
இதில் நேரடியாக கம்பெனியே விளம்பரம் செய்வதால் எந்தவித ஏஜென்ட் கமிஷன் இல்லாமல் நீங்கள் வேலை தேடலாம்.

இதில் நீங்கள் வேலை தேடும் பொழுது உங்களுடைய singpass Id கேட்கும். நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்வதால் உங்களிடம் Singpass Id இருக்கும் இதனால் நீங்கள் வேலை தேடுவது எளிது.

ஆனால் இதில் பல வேலைகள் சிங்கப்பூரர்களுக்காக இருக்கும் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை மிகவும் குறைவாகவே இதில் காணப்படும் .

இதில் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இதில் நீங்கள் செய்யக்கூடாதது ,  உங்களுக்கு தெரியாதவரிடம் எதுவும் பணம் செலுத்த வேண்டாம் ஏனென்றால் இதில் ஏமாற்று வேலையும் நடக்க வாய்ப்பு உள்ளது.

2.அடுத்தப்படியாக நீங்கள் குறைவான பணம் கட்டி உங்கள் தகுதிக்கேற்ற வேலைக்கு மாற முடியும்.

அதற்கு நீங்கள் சிங்கப்பூர் அரசு அனுமதி பெற்ற ஏஜென்சிகளை நாடலாம்.

இந்த ஏஜென்சிகளின் தகவல்கள் சிங்கப்பூர் MOM-ன் அதிகாரபூர்வமான இணைய தளத்தில் இருக்கும்.

அவர்களிடம் நீங்கள் உங்கள் டாக்குமெண்ட்களை சமர்பிக்கும் பட்சத்தில் உங்கள் தகுதிக்கேற்ற வேலை வந்தால் அவர்கள் வாங்கி தருவார்கள். இதற்கு மிகவும் குறைவான பணமே செலுத்த வேண்டும்.

3.அடுத்தபடியாக உங்கள் நண்பர்கள் யாரேனும் வேலை செய்யும் கம்பெனிகளில் வேலைக்கு ஆட்கள் எடுத்தார்கள் என்றால் நீங்கள் நேரடியாக சென்று இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி பார்க்கலாம்.

ஆனால் இதற்காக உங்கள் நண்பர்கள் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் இது சிங்கப்பூரில் சட்டப்படி குற்றமாகும்.

4.அடுத்தப்படியாக நீங்கள் சிங்கப்பூர் செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்களை பார்க்கலாம். இதிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த அனைத்து வழிகளிலும் நீங்கள் முயற்சி செய்தீர்கள் என்றால் உங்கள் தகுதிக்கேற்ற வேலைக்கு நீங்கள் மாறிக் கொள்ளலாம். 

இதுபோன்ற பதிவுகளுக்கு நமது SG Tamilan இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்!!