ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!!

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!!

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 25) அதிகாலை யியு சூ காங் சாலையில் ஒரு கோரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 2 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அப்பர் தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் யியு சூ காங் சாலையில் அதிகாலை 3:35 மணி அளவில் சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தகவல் அறிந்து காவல்துறையினர், பாதுகாப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் 25 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், 21 வயது பெண் பயணியும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள் தானாகவே சறுக்கியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்திருந்த பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) உறுதி செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த காணொளிகளானது சியாவோஹாங்ஷு என்ற சமூக ஊடக தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் சம்பவத்திற்கு பிறகு சட்ட அமலாக்க அதிகாரிகள் சாலையின் இடது பக்கத்தை மறித்து இருப்பதை காண முடிகிறது.

மேலும் உரிமம் இல்லாத வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதும், இறந்தவர்கள் உடல்களை மூடுவதற்காக காவல்துறையினர் கூடாரங்களைப் பயன்படுத்துவதும் தெரிகிறது.

அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தானது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK