ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!!

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!!

சிங்கப்பூர்: ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) கட்டுப்பாட்டை இழந்த ஒரு வெள்ளை நிற செடான் கார் கொண்டிருந்த ஒரு லாரி மீதி மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

லாரி மீது மோதியது கார் தலைகீழாக தரம் புரண்டது. மோதலின் தாக்கத்தால் காரின் ஜன்னல்கள் மற்றும் பாகங்கள் நொறுங்கி காணப்படுகின்றன.

இச்சம்பவம் குறித்த காணொளிகளை sgfollowsall என்ற இன்ஸ்டாகிராம் பக்கமானது பகிர்ந்துள்ளது.

அந்த காணொளியில் விபத்துக்கு பிறகு காரின் ஜன்னல் மற்றும் பாகங்கள் தரை முழுவதும் சிதறி கிடப்பதும், வெள்ளை நிற கார் தலைகீழாக 150 டிகிரிக்கு கவிழ்ந்திருப்பதும், அதன் வலது முன்பக்க கதவு சேதமடைந்திருப்பதையும் காண முடிகிறது.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இந்த காட்சியைப் பதிவு செய்த சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றியுள்ளனர்.

சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பல போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இருப்பதும், பாதிக்கப்பட்ட சாலைப் பகுதி சுற்றி போக்குவரத்து கூம்புகள் வைக்கப்பட்டு இருப்பதும் அந்த காணொளியில் தெரிகிறது.

இந்த விபத்து குறித்து ஜூன் 25 ஆம் தேதி அன்று சுமார் 9:35 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கும் (SCDF), காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள், விபத்தில் காயம் அடைந்த ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், வெள்ளை நிற செடான் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியதாகவும், அந்த பெரும் மோதலின் காரணமாக கார் தலைகீழாக கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK