2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய டாப் 10 பல்கலைக்கழகங்கள் எவை..???
கல்வி நிறுவனங்களின் உலகளாவிய தரவரிசையில் முதல் 10 பட்டியலில் NUS தொடர்ந்து இடம்பிடித்துள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான குவேக்குவரெல்லி சிமண்ட்ஸ் தொகுத்த இந்தப் பட்டியல், இப்போது 22வது ஆண்டாகத் தொடர்கிறது.
இதில் 106 நாடுகளைச் சேர்ந்த 1,500 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் NUS மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள ஆசியப் பல்கலைக்கழகம் ஆகும்.மேலும் முதல் 10 இடங்களைப் பிடித்த முதல் ஆசியப் பல்கலைக்கழகம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) மீண்டும் எட்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.
NUS-ஐ விட சற்று பின்தங்கிய நிலையில் மற்றொரு சிங்கப்பூர் பல்கலைக்கழகமான நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU) உள்ளது. NTU பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில்,NTU பட்டியலில் ஒன்பது இடங்கள் முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குவேக்குவரெல்லி சிமண்ட்ஸ் பட்டியலில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் முதல் சில இடங்களைப் பிடித்துள்ளன.
இதில் அமெரிக்காவின் மேசச்சூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)தொடர்ந்து 14 வது ஆண்டாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தை பிரிட்டனின் “இம்பீரியல் கல்லூரி ஆஃப் லண்டன்” பிடித்தது.