விசாரணைக்கு பதில் அளிக்கும் விதமாக விமான நிலைய அமைப்பின் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஸ்கூட்டின் சில விமானங்கள் தாமதமாகி விட்டதாக ஸ்கூட் தெரிவித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு பயணிகள் பதிவு செய்யும் கவுண்டர்களில் பயணிகளுக்கு உதவ கூடுதல் ஊழியர்களை நியமித்துள்ளதாக ஸ்கூட் தெரிவித்துள்ளது.
தற்பொழுது தொழில்நுட்பச் சிக்கல் தீர்க்கப்பட்டு தானியங்கி பதிவு செய்யும் கவுண்டர்கள் உட்பட போர்டிங் அமைப்பு மீண்டும் இயல்பாக செயல்பட தொடங்கியுள்ளது.
ஏற்பட்ட சிரமத்திற்கு ஸ்கூட் நிறுவனம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.