சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!! என்ன தெரியுமா?
சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 0.45 மாத சம்பளம் அரையாண்டு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும், கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக $400 வரை ஒருமுறை மட்டும் ரொக்கப் பணம் வழங்கப்படும் எனவும் பொது சேவை பிரிவு (PSD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூன் 23ஆம் தேதி அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் MX13(I) மற்றும் MX14 இணையான தரநிலைகளில் உள்ள அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு முறை மட்டும் $250 வழங்கப்படும் என்று PSD கூறியது.
MX15 மற்றும் MX16 இணையான தரநிலைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கும் செயல்பாட்டு ஆதரவு திட்டத்தில் உள்ளவர்களுக்கும் ஒருமுறை ஊக்கத்தொகையாக $400 வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் பொருளாதாரம் 6% வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பொருளாதார கண்ணோட்டத்தில் உலகளாவிய பாதகமான அபாயங்கள் நீடிப்பதால் இந்த போனஸ் அளவு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025) ஊழியர்கள் 0.4 மாத அரையாண்டு போனஸைப் பெற்றனர். இந்த முறை அது சற்றே உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கை செலவினங்கள் அழுத்தத்தை சமாளிக்க ஏதுவாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு இந்த கூடுதல் தொகை ஒரு குறிப்பிட்ட இலக்காக கொண்டு வழங்கப்படுகிறது என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) தெரிவித்துள்ளது.
ஆண்டிறுதி போனஸ் குறித்த இறுதி முடிவு, இந்த ஆண்டின் எஞ்சிய காலப் பொருளாதார நிலவரங்களைக் கண்காணித்து, தேசிய சம்பள மன்றத்தின் (NWC) வழிகாட்டுதலின்படி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.