ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் தொற்று..!! கட்டுப்படுத்த தீவிர முயற்சி..!!
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் முதலில் பறவை காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது. அங்குள்ள இரண்டு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அடுத்த சில நாளில் தென் ஆஸ்திரேலியாவில் புலம் பெயரும் கடல் பறவையிடம் பறவை காய்ச்சல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
புலம்பெயரும் பறவைகளிடம் மட்டுமே பறவை காய்ச்சல் தொற்று உள்ளது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும் இவ்வித தொற்றானது மனிதர்களிடமோ அல்லது பிற உயிரினங்களிடமோ உள்ளதா என்று சோதனை செய்வதில் அவர்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை என ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.