சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று (03.06.25)நடைபெற்ற தேசிய பல்கலைக்கழக 120 ஆவது ஆண்டு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் (NUS) போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், உலகத் திறமைகளை ஈர்க்கும் வகையில் திறந்த மற்றும் அழைப்புமிக்க சூழலை உருவாக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,“NUS போன்ற பல்கலைக்கழகங்கள் பன்னாட்டுத் திறன்களின் ‘சரணாலயமாக’ இருக்க வேண்டும்” என்று கூறினார். இது சிங்கப்பூர், அறிவுத்திறன் மற்றும் ஆராய்ச்சி வளங்களை வளர்க்கும் வழியாக அமையும் என்று கூறினார்.
சிங்கப்பூர் அறிவியல் மற்றும் திறமையின் மையமாக மாற விரும்புகிறது. அதற்காக, நாட்டின் கல்வி முறைகள் பாரம்பரியத்தையும் திறமையையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
அதேவேளை,கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் அதில் திறமைகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி,அறிவு,முயற்சி மற்றும் செயல் திறன் போன்றவை முக்கியம் என வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் திறமையாளர்கள் இடம்பெயர்ந்து வருவதால், சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் அந்தத் திறமையாளர்களைச் சேர்ப்பதற்கான மையமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் உலகளாவிய போட்டியில் முன்னிலை வகிக்க சர்வதேச மாணவர்களையும் திறமையையும் வரவேற்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த உரையானது பல்வேறு மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் சிங்கப்பூரின் கல்வி மற்றும் அறிவுத்துறை வளத்தை வளப்படுத்த உதவ வேண்டும் என்ற தன்னம்பிக்கை உருவாகும் விதமாக அமைந்தது.