சிங்கப்பூரில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதி வழங்கிய அமைப்பு..!!!
சிங்கப்பூர்: கடந்த மாதம் ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோங் கத்தோங்கில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்பளத்தில் பெண்ணோடு சேர்த்து அவரது காரும் சிக்கியது.
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர். இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வுக்காக கடந்த வாரம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இஸ்தானில் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம் ஊழியர்களை கைகுலுக்கி வரவேற்று கலந்துரையாடி மேலும் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் அவர்களுக்கு அதிபர் சின்னம் பதித்த சிறப்பு பேனா பரிசாக வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் அளித்த அங்கீகாரம் குறித்து மேற்பார்வையாளர் திரு பிச்சை உடையப்பன் சுப்பையா செய்தியாளரிடம் கூறியதாவது: ‘ இந்த செயல் எங்களுக்கு அங்கீகாரம் மற்றும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது’.