என்னடா நடக்குது சிங்கப்பூர்ல!

என்னடா நடக்குது சிங்கப்பூர்ல!

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான செயலியான Grab மூலம் நாம் மிகவும் எளிமையாக டாக்ஸி புக் செய்து கொள்ளலாம்.

இன்று இதில் அங் மோ கியோவில் இருந்து ஜுரோங்கிற்கு செல்ல 1500 சிங்கப்பூர் வெள்ளி செலவாகும் என்று காண்பித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பலருக்கும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஆயிரம் வெள்ளிக்கு மேல் செலவாகும் என்று செயலியில் குறிப்பிட்டிருந்தது.

அதைக் குறித்த படங்களை பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மலேசியாவிலும் இதை பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

செயலியில் ஏற்பட்ட கோளாறு குறித்து மேல் விவரங்களை பெறுவதற்காக செய்தி நிறுவனம் Grab நிறுவனத்தை தொடர்பு கொண்டது.

இந்த தவறுக்கு தொழில் நுட்பக் கோளாறு காரணம் என்று நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

Grab செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது. பயணக்கட்டணம் வழக்கம் போல Grab செயலியில் காண்பிக்கப்படுகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan