பொங்கோலில் அதிர்ச்சி விபத்து…!!

பொங்கோலில் அதிர்ச்சி விபத்து...!!

சிங்கப்பூர்:பொங்கோல் பகுதியில் ஒரு டெலிவரி லாரி சரிவில் இருந்து விலகி புல்வெளிக்குள் சறுக்கியது.இதனால் நடைபாதையில் சென்றவர்களை மோதும் நிலை ஏற்பட்டது.

நேற்று(09.11.25) பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய ஒரு பெண் தற்போது விசாரணைக்கு உதவி செய்து வருகிறார்.

சம்பவம் நடந்த இடத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளமான Instagram இல் பகிரப்பட்டன.

லாரி கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் விபத்து குறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK