சிங்கப்பூரில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி..!! எதற்காக தெரியுமா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எட்டு ரயில் நிலையங்களிலும் இரண்டு பேருந்து முனையங்களிலும் வைக்கப்பட்டுள்ள நன்கொடைத் திரட்டும் கருவிகள் வரும் 2026 ஜனவரி 16 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று MRT தெரிவித்துள்ளது.
பயணிகள் தங்களது ஈஸி-லிங்க் அட்டைகள், கடன் அட்டைகள், திறன்பேசிகள் அல்லது திறன்கடிகைகள் (smartwatches) மூலம் இந்த கருவிகளில் நன்கொடைகளை வழங்கலாம். $2, $8, $20, $50, $88 அல்லது $100 என பல்வேறு தொகைகளில் நன்கொடைகள் அளிக்கலாம்.
‘Tap for Hope’ எனப்படும் இந்த நன்கொடைத் திரட்டு இயக்கம் MRT நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. திரட்டப்படும் நிதி, உடற்குறை உடையவர்களுக்கு உதவும் SPD தொண்டூழிய அமைப்புக்குக் கொடுக்கப்படும். வயது வித்தியாசம் இன்றி, அவசியம் உள்ள அனைவருக்கும் அமைப்பு உதவிகளை வழங்குகிறது.
இந்த முயற்சி, அதிபர் சவால் நிதி திரட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை சிராங்கூன், புவன விஸ்தா,பாயோ லேபார், பூகிஸ், உட்லண்ட்ஸ், மரேன் பரேட் ஆகிய ரயில் நிலையங்களில் பொதுமக்கள் நன்கொடைகளை வழங்கலாம். அதேபோல், சுவா சூ காங் மற்றும் உட்லண்ட்ஸ் பேருந்து முனையங்களிலும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தஞ்சோங் பகார் மற்றும் ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையங்களிலும் சில வாரங்களுக்கு நன்கொடைக் கருவிகள் வைக்கப்பட உள்ளன.பயணிகள் PayNow குறியீடுகள் மூலம் நன்கொடைகளை வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.