அதிர்ச்சி..!!! யூனோஸ் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து..!!!

அதிர்ச்சி..!!! யூனோஸ் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து..!!!

சிங்கப்பூர்: யூனோஸ் பகுதியில் நேற்று (14.11.25) மாலை ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் ஒரு கார் சறுக்கி கவிழ்ந்து பள்ளத்தில் நின்றது.

இந்த விபத்தில் 31 வயதான பெண் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போலீசார் தெரிவித்ததாவது, மாலை 6:09 மணியளவில் யூனோஸ் அவென்யூ 3-ல் இருந்து யூனோஸ் அவென்யூ 2 நோக்கிச் செல்லும் பகுதியில் கார் சறுக்கி விழுந்ததாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர்.

சியாவோஹோங்ஷு (Xiaohongshu) சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளியில், சிங்போஸ்ட் மையம் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்த காரை காணலாம்.

வாகனத்தின் பின்புற கதவு திறந்த நிலையில் ஒரு பள்ளத்தில் நின்றிருந்தது. அருகில் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனமும் இருந்தன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது, ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் கூறியதாவது, ஓட்டுநருக்கு வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லாமல் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK