சிங்கப்பூர் NUS வளாகத்தில் பிரம்மாண்ட திட்டம்..!! யாருக்குத் தெரியுமா..??
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) தனது கென்ட் ரிட்ஜ் வளாகத்தில் ஒரு புதிய ஹோட்டலை கட்டி வருகிறது. கிட்டத்தட்ட 200 அறைகளைக் கொண்ட இந்த வளாக ஹோட்டல் அடுத்த ஆண்டு முதல் பாதியில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NUS அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் தகவலின்படி, “தி ரிட்ஜ்” என பெயரிடப்பட்டுள்ள இந்த வளாக ஹோட்டல் மொத்தம் 185 அறைகளைக் கொண்டுள்ளது. இது NUS ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் அருகே, கம்ப்யூட்டிங் டிரைவில் அமைந்துள்ளது.
இந்த ஹோட்டல் மாணவர்கள், வருகை தரும் அறிஞர்கள் மற்றும் நிபுணர்களுக்கானது. பொதுமக்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளுக்காக இது திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிட்ஜ் விடுதியில் ஒற்றையர், இரட்டையர் அறைகள் மற்றும் சந்திப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். குடியிருப்பாளர்கள் கென்ட் ரிட்ஜ் கில்ட் ஹவுஸில் உள்ள நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட NUSS வசதிகளையும் பயன்படுத்த முடியும்.
விருந்தினர்களுக்கு வளாகத்தில் உள்ள ஷட்டில் பேருந்து மூலம் ஹோட்டலுக்குச் செல்ல வசதி இருப்பதாகவும், இது மாணவர்கள் மற்றும் கல்வி சமூகத்திற்கான புதிய சௌகரியம் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.