சிங்கப்பூரில் ஏப்ரல் 1 முதல் தொடங்கிய புதிய திட்டம்..!!
சிங்கப்பூரில் பாட்டில்களையும் பானக்கலன்களையும் மறுசுழற்சி செய்ய ஒரு புதிய இயந்திரப் பயன்பாடு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
“10C SG Return” என்ற முத்திரை உள்ள பாட்டில்களையும் பானக்கலன்களையும் மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களில் போட்ட வாடிக்கையாளர்கள் 10 காசை திரும்ப பெற முடியும். 150 ml இல் இறந்த மூன்று லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பாட்டில்களுக்கும் பானக்கலன்களுக்கும் நீங்கள் 10 காசு பெற்று கொள்ளலாம்.
பேரங்காடிகள், உணவகங்காடி நிலையங்கள், கடைகள் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதனை செய்த 20 இடங்களில் விற்கப்பட்ட பாட்டில்களிலும் பானக்கலன்களிலும் இத்தகைய முத்திரை காணப்படவில்லை.
இயந்திரத்தில் இத்தகையா பாட்டில்களையும் பானக்கலன்களையும் போட்டால் மட்டுமே வாடிக்கையாளர்களின் ஈஸி லிங்க் அட்டைகளுக்கும் பிபிஎஸ் செய்யலாம் இணைய பண பைக்கும் 10 காசு போட முடியும்.
சிங்கப்பூர் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான பாட்டில்கள் பான கலன்கள் மறுசுழற்சி செய்ய இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆங் மோ கியோ, மேஃபிளவர் சந்தை, உணவங்காடி நிலையம் மற்றும் பார்க்வே பரேட் ஆகிய இடங்களில் மறுசுழற்சி செய்யப்படுவதற்கான முத்திரைகள் பாட்டில்களிலும் பானகலன்களிலும் இல்லை.
அதற்கு மாறாக சினேபல் பானகலன்கள், இளநீர் உள்ள கலன்கள், ஏவியன் தண்ணீர் பாட்டில் ஆகிய வெளிநாட்டு பாட்டில்களிலும் பானக்கலன்களிலும் மறுசுழற்சி திட்டத்திற்கான முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை உள்ளூர் இயந்திரங்களில் திரும்ப செலுத்தி பணம் பெற முடியாது.
சிங்கப்பூர் முத்திரை பதிக்காத பானங்களுக்கு கூடுதலாக பத்து காசை வசூலிக்க போவதில்லை என பான கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். பேரங்காடிகளும் பானங்களுக்கு கூடுதலாக 10 காசு வசூல் செய்யப்படமாட்டாது.