கடல் பகுதியில் நடக்கும் வினோத திருட்டுச் சம்பவம்..!!
சிங்கப்பூர்:சீனக் கடல் பகுதியில் சட்டவிரோதமாக கப்பலுக்கு பயன்படுத்தப்படும் டீசலை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 பேரை போலீசாரால் கைது செய்துள்ளனர்.
நேற்று (10.10.25) துவாஸ் அருகே வழக்கமான சோதனையின் போது, கடலோர காவல்படை சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இழுவைப் படகில் ஏறியதாகவும்,அதில் தனியார் கடல் டீசலை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல பணியாளர்களைக் கண்டுபிடித்ததாகவும் போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
பின்னர், அருகில் இருந்த வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட இழுவைப் படகை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணையைத் தொடங்கினர்.
சிங்கப்பூர் இழுவைப் படகு குழுவினர், நிறுவனத்திற்குத் தெரியாமல், வெளிநாட்டு இழுவைப் படகு குழுவினருக்கு சுமார் S$6,900 மதிப்புள்ள டீசலை விற்றதாகக் கூறப்படுவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட இழுவைப் படகுகளைச் சேர்ந்த மூன்று பேரும், வெளிநாட்டு இழுவைப் படகுகளைச் சேர்ந்த ஐந்து பேரும் உட்பட 24 முதல் 61 வயதுக்குட்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.