கேலாங்கில் திடீரென ஏற்பட்ட மோதல்..!!

கேலாங்கில் திடீரென ஏற்பட்ட மோதல்..!!

சிங்கப்பூர்: கேலாங் லோரோங் 16 – இல்  இன்று(09.03.26) காலை 8:15 மணி அளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இந்த மோதல் சம்பவத்தில், 70 வயது முதியவரை 48 வயது ஆடவர் ஒருவர் பலமான ஆயுதத்துடன் தாக்கியுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்து இறுதியில், முதியவர் திடீரென மயக்க நிலைக்குச் சென்றார்.

இந்த சண்டை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடைந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 70 வயது முதியவர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் இரத்தங்கள் நிறைந்து காணப்பட்டது. 48 வயது நபருக்கும் காயமடைந்ததை அடுத்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்த முதற்கட்ட விசாரணையின் போது, இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று தெரிய வந்தது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK