அரியானா கிராண்டே விழாவில் நடிகை மீது பாய்ந்த இளைஞரால் பரபரப்பு..!!

அரியானா கிராண்டே விழாவில் நடிகை மீது பாய்ந்த இளைஞரால் பரபரப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் திரைப்படத் திரையிடலில் நடிகை அரியானா கிராண்டேவுடன் புகைப்படம் எடுக்க பொறுப்பற்ற முறையில் விரைந்து சென்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர், பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை அழைத்துச் சென்றனர். நேற்று (14.11.25) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் “தி விக்கட்: ஃபார் குட்” திரைப்படத் திரையிடல் நடந்தபோது நிகழ்ந்ததாக CNA தெரிவித்தது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், ஒரு நபர் திடீரென பாதுகாப்பு வேலியைத் தாண்டி, அரியானா கிராண்டேவிடம் வேகமாக ஓடி சென்று, அவரது தோளில் கை வைத்து துள்ளிக் குதிப்பது பதிவாகியுள்ளது.

நிகழ்வில் கிராண்டேயுடன் இருந்த சிந்தியா எரிவோ, ஜெஃப் கோல்ட்ப்ளம், மிச்செல் யோ மற்றும் இயக்குனர் ஜான் எம். சூ போன்ற பிரபலங்கள் அதிர்ச்சியடைந்தனர். அரியானாவை பாதுகாக்க நடிகை எரிவோ உடனடியாக தலையிட்டார்.

பாதுகாப்புப் படையினர் சில விநாடிகளுக்குள் அந்த நபரை பிடித்து வெளியேற்றினர். பின்னர் அவர் செந்தோசாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த நபர் 26 வயதான வென் ஜான்சன், “பைஜாமா மேன்” என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய உள்ளடக்க படைப்பாளர் ஆவார். அவர் முன்பும் கேட்டி பெர்ரி, தி வீக்கெண்ட் உள்ளிட்ட பிரபலங்களை நோக்கி இதே போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் சமூக ஊடகங்களில் இதற்கான வீடியோவை பதிவேற்றி, “அன்புள்ள கிராண்டே, மஞ்சள் கம்பளத்தில் உங்களுடன் குதிக்க அனுமதித்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டார். இந்த பதிவுக்கு பலர் கடும் விமர்சனங்கள் தெரிவித்தனர். பல நெட்டிசன்கள் அவரது நடத்தை “மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK