டார்கெட் வழக்கால் ஆபென் ஊழியர்கள் பணிநீக்கம்…!!

டார்கெட் வழக்கால் ஆபென் ஊழியர்கள் பணிநீக்கம்...!!

சிங்கப்பூர்: அமெரிக்க சில்லறை விற்பனைப் பிராண்டான டார்கெட்,உள்ளூர் ஃபேஷன் நிறுவன ஆபென் மீது வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், ஆபென் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனம் முழுமையாக மூடப்பட்டதா என்பது இன்னும் தெளிவாக இல்லை.

கடந்த மாதம், ஆபென் தனது இணையதளத்தில் உள்ள அனைத்து தயாரிப்புகளையும் அகற்றியது. வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில், சட்ட ஆவணங்களுடன் பழுப்பு நிற டோட் பையின் புகைப்படம் மட்டுமே காணப்படுகிறது. வழக்கறிஞர் கடிதம் மூலம், ஆபென் மற்றும் டார்கெட் தயாரிப்புகளின் தோற்றம் “கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது” என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபென் நிறுவனர் முன்னாள் தேசிய நீச்சல் வீரர் சென் சூவேய் ஆவார்.அவர் இதை 2022-ல் நிறுவி சமச்சீரற்ற தோல் கைப்பைகளுக்கு பிரபலமாகியுள்ளார். பைய்களை சர்வதேச பிரபலங்கள் Taylor Swift,Beyonce போன்றோர் பயன்படுத்தியுள்ளனர்.

டார்கெட், அமெரிக்கா முழுவதும் 1,981 கடைகள் கொண்ட சில்லறை விற்பனை சங்கிலியாகும்.இது மளிகைப் பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. கடந்த இரண்டாம் காலாண்டில், அதன் நிகர விற்பனை US$25.21 பில்லியன் (சுமார் S$32.34 பில்லியன்) எட்டியுள்ளது.

சிங்கப்பூரின் அறிவுசார் சொத்து அலுவலகம் (IPOS) மற்றும் அமெரிக்காவின் USPTO ஆபனின் வர்த்தக முத்திரை விவகாரத்தை கண்காணித்து வருகின்றன.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan