ஜலான் காயு பகுதியில் நடந்த விபத்து!! மருத்துவமனையில் மூவர் அனுமதி!!
ஜனவரி மாதம் 28ஆம் தேதி பிற்பகல் ஜலான் காயு பகுதியில் விபத்து நடந்தது.இச்சம்பவம் குறித்து 1.50 மணியளவில் விபத்து குறித்த தகவல் வந்ததாக காவல்துறை 8 வேர்ல்ட் செய்திதளத்திடம் தெரிவித்தது.
இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான வாகனங்களில் மோட்டார் சைக்கிளுக்கு அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்தித்தளம் தெரிவித்தது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 50 வயதுடைய நபர்,மேலும் அதில் பயணம் செய்த 40 வயது உடைய பெண் மற்றும் காரில் இருந்த 34 வயதுடைய பெண் ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.