கடந்த(ஆகஸ்ட்) 13ஆம் தேதி SG Road Vigilante இன்று சமூக ஊடக பக்கத்தால் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட டேஷ்கேம் காட்சிகளில் பசுபிக் பிளாசாவுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இடது பக்கத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் வெள்ளை நிற டொயோட்டா காரை முந்தி செல்ல முயற்சிப்பது போல் காட்சி காட்டப்பட்டிருந்தது.
எதிர்பாராத விதமாக காரில் இருந்த பயணி இறங்கவிருந்த போது கதவு திறந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கதவு மீது பலமாக மோதியதால் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் விழுந்தார். காரில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஏராளமான பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு உதவ முன் வந்தனர்.
இந்த விபத்து ஆர்ச்சர்ட் சாலையில் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறிய காயங்களுக்கு ஆளானார். ஆனால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார். விபத்துக்கான சரியான காரணம் ஆன்லைனில் சூடான விவாதத்தை தூண்டி இருக்கிறது.
இதுகுறித்து சேனல் 8 இன் விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று(14 ஆம் தேதி) மாலை 6:20 மணியளவில் கிளேமோர் ஹில்லில் ஒரு கார் விபத்து குறித்த அறிக்கை கிடைத்ததாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
சிவில் பாதுகாப்பு படையின் கருத்துப்படி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.
இந்த காணொளி விரைவாக ஆன்லைனில் வைரல் ஆகி வரும் நிலையில் பேஸ்புக்கில் 3,00,000 க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்ட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த விபத்து குறித்து நெட்டிசன்கள் பலர் பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். சிலர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இடது புறத்தில் முந்தி சென்றிருக்கக் கூடாது என கூறுகின்றனர்.
மற்றவர்கள் ஓட்டுநர் சாலை ஓரத்திற்கு அருகில் நிறுத்தி பயணியை இறங்கச் செய்வதற்கு முன்பு தனது அபாய விளக்குகளை இயக்கி இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.