தெம்பனிஸ் விரைவுச் சாலையில் நேற்று (பிப்ரவரி 23, 2026) பிற்பகல் நேரத்தில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
சரியாக பிற்பகல் 1:20 மணி அளவில் இரண்டு கார்கள், இரண்டு டாக்ஸிகள் மற்றும் இரண்டு லாரிகள் என ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கிய தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. விபத்து குறித்த 59 வயது டாக்ஸி ஓட்டுனாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ பதிவானது சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட உள்ளது. அதில் விரைவு சாலையின் ஒரு பகுதியை அதிகாரிகள் மூடி இருந்ததாக தெரிகிறது.
விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் வாகனங்கள், அவசர உதவி வாகனம் மற்றும் விரைவுச்சாலை கண்காணிப்பு வாகனம் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
மேலும் இந்த வீடியோவில் ஒரு லாரி கவிழ்ந்து கிடந்தது தெரியவந்தது அதற்குப் பின்னால் ஒரு டாக்ஸியும் ஒரு காரும் நின்றிருந்தன. வாகனத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதை இந்த காணொளி பதிவில் காண முடிகிறது.