அப்பர் சாங்கி சாலையில் ஏற்பட்ட விபத்து..!! பாதிப்பு யாருக்கு..??
அப்பர் சாங்கி சாலையில் ஒரு கார் பேருந்து மீது மோதி பிப்ரவரி 14ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் விபத்துக்குள்ளானது.
முன்னோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் திரும்பிய பேருந்து மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்து காணொளியை SGRV ADMIN இன் பேஸ்புக் பதிவில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ காணொளிக்கு பதில் அளிக்கும் விதமக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அப்பர் சாங்கி சாலை மற்றும் ப்ளோரா டிரைவ் சந்திப்பில் ஒரு போக்குவரத்து விபத்து நடந்துள்ளதாக பிற்பகல் 2:50 மணி அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததை உறுதிப்படுத்தி கூறியுள்ளது.