சந்திர புத்தாண்டு விடுமுறை எதிரொளியாக கூடுதல் விமான சேவை..!!!

சந்திர புத்தாண்டு விடுமுறை எதிரொளியாக கூடுதல் விமான சேவை..!!!

சாங்கி விமான நிலையக் குழுமம் வரவிருக்கும் சந்திர புத்தாண்டு விடுமுறை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் நெரிசலை சமாளிக்க, சீனாவிற்கும் சீனாவிலிருந்தும் கூடுதல் விமான சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இந்த காலகட்டத்தில், ஆறு விமான நிறுவனங்கள் இணைந்து 600க்கும் மேற்பட்ட கூடுதல் விமானங்களைச் சேவையில் சேர்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் விமானங்கள் சீனாவின் 15 நகரங்களை சிங்கப்பூருடன் இணைக்கும். ஷாங்காய், குவாங்சோ, செங்டு, சோங்கிங், வுஹான், சியான், ஜியாமென் உள்ளிட்ட பிரபல நகரங்களுக்கு அதிக விமான விருப்பங்கள் கிடைக்கும்.சந்திர புத்தாண்டு காலத்தில் சில சீன நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

ஏர் சீனா, சைனா ஈஸ்டர்ன், சைனா சதர்ன், லூங் ஏர், ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் மற்றும் ஜியாமென் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் இந்த சேவைகளை வழங்குகின்றன. இதனால் பயணிகளுக்கு நேரம் மற்றும் கட்டணத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விசா இல்லாத பயண ஏற்பாடு காரணமாக, சந்திர புத்தாண்டு காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா தேவை அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இந்த கூடுதல் விமான சேவைகள், சீனாவுக்கான முக்கிய விமான மையமாக சிங்கப்பூரின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த காலகட்டத்தில் சாங்கி விமான நிலையம் மற்றும் ஜுவல் சாங்கியில் முன்கூட்டியே செக்-இன் சேவைகள் நீட்டிக்கப்படுவதுடன், சில சேவைகள் 24 மணி நேரமும் செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Support Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.

function showPopup() { document.body.classList.add("adblock-lock"); const overlay = document.getElementById("adblock-overlay"); overlay.style.display = "flex"; // Disable scrolling document.body.style.overflow = "hidden"; // Disable right click document.addEventListener("contextmenu", function(e){ e.preventDefault(); }); // Disable keyboard shortcuts document.addEventListener("keydown", function(e){ e.preventDefault(); }); // Disable touch scrolling document.addEventListener("touchmove", function(e){ e.preventDefault(); }, { passive:false }); }